Friday, July 25, 2008

சித்த மருத்துவம்

சிதையும் தமிழ் மருத்துவம்

மரு. அருள் அமுதன்
 

முதல் மனிதன் பசிக்கும்போது ஏதோ ஒன்றை சாப்பிட்டிருப்பான். ஒருவேளை அது வாந்தியையோ அல்லது வயிற்றுப் போக்கையோ அல்லது மரணத்தையோ அல்லது உடல் வலுவையோ தந்திருக்கக் கூடும். இதை பார்த்த சக மனிதன் அனுபவபாடம் (Experienced study) கற்றுக் கொண்டிருப்பான். இப்படி அனுபவ பாடத்திட்டமாக பரிணாம வளர்ச்சி அடைந்து வந்ததுதான் தமிழ்நாட்டு உணவு மற்றும் மருத்துவம். எந்த ஒரு வம்ச மனிதனாவது நோயே வராமல் வாழ்ந்திருக்க முடியுமா? முடியவே முடியாது! வேட்டையாடும் போது, ஓடும்போது, சில நஞ்சு உணவுகளை உண்ணும் போது அல்லது சில தாக்குதல்களின் போது ஏற்பட்ட காயத்தை

சித்த மருத்துவம்


சிறுநீர் கறுத்தால்....

- மரு. அருள் அமுதன்

"உண்டறுகின்ற நீர்தானுயர் தலைமுடியே போலே
கண்டிடு மெழுகதமரங் காயினில் வியாதியென்று
விண்டிடச் செய்வாயிந்த விதமுறு சாத்திரத்தைக்
கண்டு தேர்ந்திருக்குமே கூறிய குணம்மிதாமே"


ஒரு நோயை அணுகுவதில் சித்தர் தேரன் எவ்வளவு கவனம் செலுத்தி இருக்கிறார் என்பதற்கு இப்பாடல் ஒரு சிறிய சான்று. தேரையர் நீர்க்குறி நெய்க்குறி வைத்தியம் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்ட இப்பாடலின்படி, பெய்கின்ற சிறுநீரானது தலைமுடியின் நிறத்தை ஒத்திருப்பின், தமரகத்தில் (இதயம்) பிணியுள்ளது என்று அறிய முடிகிறது.

Myoglobin (MB) என்பது Hemoglobin (HB) போன்ற ஒரு நிறமி ஆகும். இதுதான் இதயம் மற்றும் பிற தசைகளுக்கு சிகப்பு நிறத்தைக்கொடுக்கிறது. உடலின் மொத்தம் உள்ள இரும்புசத்தில் 5% இந்த Myoglobin -க்குள் தான் இருக்கிறது. இது ஆக்ஸிஜனை தன்னுள் சேர்த்து வைத்திருக்கும். தேவைப்படும்போது தசைச்செல்களுக்கு ஆக்ஸிஜனை பரிமாற்றம் செய்து அவற்றை உயிருடன் இருக்கச்செய்யும். எவ்வளவுக்கெவ்வளவு Myoglobin அதிகமாக உள்ளதோ, அவ்வளவுக்கவ்வளவு அதிகமான இரத்தஓட்டம் அந்த தசைப்பகுதியில் இருக்கும். மட்டுமல்ல, அதிக ஆக்ஸிஜனும், அதிக சிகப்பு நிறமும் இருக்கும்.

இதயத்தசைகளுக்கும் இரத்தம் பாய்ச்சும் சிறிய இரத்தக்குழாய்கள் உண்டு. அவற்றை Coronary artery என்று அழைப்பர். இந்த இரத்தக்குழல்களில் அடைப்போ, சுருக்கமோ ஏற்படும்போது இதயத்தசைகளுக்கு இரத்தம் கிடைக்காமல் போகும். இதைத்தான் Coronary Arterial Disease (CAD) மற்றும் Ischaemic Heart Disease (IHD) மற்றும் Myocardial Infarction (MI) போன்ற பல்வேறு பெயர்களில் அழைப்பர். நோயாளி நெஞ்சுவலியையும், படபடப்பையும், அதிகவியர்வையையும் உணர்வான். இந்தநேரம் இதயத்தசையில் உள்ள Myoglobinதசையிலிருந்து வெளியேறி இரத்தத்தில் கலந்து விடுவதால், பாதிக்கப்பட்ட இதயத்தசைகள் வெளுத்து அல்லது நிறமிழந்து காணப்படும்.

Creatinine Phospho kinese (CPK) Lactic Delydrogenase (LDH), Cardiac Troponins (CT), Myoglobin என்ற நான்கு என்சைம்களும் பாதிக்கப்பட்ட இதயத்தசையிலிருந்து வெளியேறி குருதியில் கலப்பதால் குருதியில் அவற்றின் அளவு இயல்புக்கு மாறாக அதிக அளவில் காணப்படும். இதை பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம்.

இதயத்தசை பாதிக்கப்பட்ட உடன், முதலில் Myoglobin தான் குருதியில் அதிகமாக காணப்படும். (First cardiac marker) குருதியில் உள்ள இந்த Myoglobin சிறுநீர் வழியாக வெளியேற்றப்பட்டு விடுவதால், அடுத்தநாளில் சிறுநீரில் Myoglobin காணப்படாது.

முதல் நாளுக்குள் சிறுநீரில் வெளியாகும் இந்த சிறுநீருக்கு brownblack or black நிறத்தை வேதியியல் மாற்றத்தின் காரணமாக தருகிறது. சாதாரணமாக இளமஞ்சள் நிறமாக பெய்யும் சிறுநீர், தலைமுடியின் நிறத்தை brownblack or black ஒத்திருப்பின் தமரகத்தில் பிணியுண்டாகுமென்று அறிந்து கொள்ளலாம்.

( நண்பர் அருளமுதன் கீற்று.காம் ல் எழுதிய கட்டுரை )